டிரம்ப் தொடர்ந்து முன்னிலை

டிரம்ப் தொடர்ந்து முன்னிலை

1 mins read
c5c07cc4-01de-4b6a-b640-92a6d2caec38
-

டெட்­ராய்ட்: அமெ­ரிக்க அதிபர் வேட்­பா­ளர் போட்­டி­யில் குடியரசுக் கட்­சி­யின் சார்பில் டோனல்ட் டிரம்ப் மிச்­சி­கன், மிஸ்­ஸி­சிப்பி, ஹவாயி ஆகிய இடங்களில் வெற்­றி­பெற்­றுள்­ளார். ஜனநாயகக் கட்­சி­யின் சார்பில் மிச்­சி­க­னில் நடை­பெற்ற பிர­சா­ரத்­தில் ஹில்லரி கிளிண்டனைப் பின்­னுக்­குத் தள்ளி பெர்னி சாண்டர்ஸ் வெற்­றி­பெற்­றுள்­ளார். ஹில்லரி கிளிண்டன் மிஸ்­ஸி­சிப்­பி­யில் வெற்றி பெற்­றி­ருந்தா­லும் சாண்டர்­சின் வெற்றி அவ­ருக்கு பின்­னடைவை ஏற்­படுத்­தி­ யுள்­ளது. டிரம்ப் மிச்­சி­க­னில் வெற்­றி­பெற்­றதை அடுத்து அவரது வெற்றி வாய்ப்­பு­கள் பிர­கா­ச­மா­கி­யுள்­ள­தா­கக் கவ­னிப்­பா­ளர்­கள் குறிப்­பி­டு­கின்ற­னர்.

குடியரசுக் கட்­சியைச் சேர்ந்த டிரம்புக்கு எதிரான­வர்­கள் அவரது முன்­னேற்­றத்தைத் தடுப்­ப­தற்கான புதிய உத்­தி­களைக் கையாள வேண்டிய கட்­டா­யத்­துக்கு உட்­படுத்­தப்­பட்­டுள்­ள­னர். மிச்­சி­க­னில் தாமடைந்த வெற்றி அம்­மா­நி­லத்­தில் தமது வாய்ப்­பு­களைக் காட்­டு­வ­தாக குடி­ய­ர­சுக் கட்­சியைச் சேர்ந்த சாண்டர்ஸ் குறிப்­பிட்­டார். ஹில்லரி கிளிண்ட­னுக்கு மிச்­சி­க­னில் வலுவான போட்டி இருக்­கும் என முன்பே எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதனை அடுத்து அவ­ருடைய கண­வ­ரும் முன்னாள் அதி­ப­ரு­மான பில் கிளிண்டன், மகள் செல்சி கிளிண்டன் ஆகியோர் மிச்­சி­க­னில் கடந்த சில நாட்­க­ளாக பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டிருந்த­னர். இருப்­பி­னும் சாண்டர்ஸ் மிச்­சி­க­னில் வெற்­றி­பெற்­றதை அடுத்து வேறு சில மாநி­லங்களி­லும் அவர் வெற்­றி­பெ­று­வதற்­கான வலுவான சாத்­தி­யக்­கூ­று­கள் இருப்­ப­தாகக் கூறப்படுகிறது.