ஐஎஸ் அமைப்பின் முக்கிய போராளித் தலைவர் பலி

ஐஎஸ் அமைப்பின் முக்கிய போராளித் தலைவர் பலி

1 mins read
fd38b492-b34d-41c0-8448-1c5757305fda
-

வா‌ஷிங்டன்: ஐஎஸ் அமைப்­பில் தற்­காப்பு அமைச்­ச­ருக்கு இணை­யா­கக் கரு­தப்­படும் நபர் அமெ­ரிக்­கா­வின் ஆகாயத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­ட­தாக அமெ­ரிக்க அதிகாரி ஒருவர் தெரி­வித்­துள்­ளார். ஒமர் அல் ‌ஷிஷானி (படம்) எனும் போரா­ளியைக் குறிவைத்து இம்­மா­தம் நான்காம் தேதி நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் அந்த நபர் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டா­லும் தாக்­கு­தல் முடி­வு­கள் ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கக் சொல்லப்­படு­கிறது. இருப்­பி­னும் பெயர் குறிப்­பிட விரும்பாத அமெ­ரிக்க அதிகாரி ஒருவர், அமெ­ரிக்­கா­வின் ஆளில்லா விமானம், போர் விமானம் ஆகி­ய­வற்­றின் தாக்­கு­த­லில் வேறு 12 போரா­ளி­களு­டன் அல் ‌ஷிஷா­னி­யும் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

தனது சிவப்பு நிறத் தாடியால் பிர­ப­ல­மான அல் ‌ஷிஷா­னி­யின் தலைக்கு 5 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் சன்­மா­னம் வழங்­கு­வ­தாக அமெ­ரிக்கா குறிப்­பிட்­டி­ருந்தது. படி­ராஷ்­விலி என அழைக்­கப் ­படும் அந்த நபர் கொல்­லப்­பட்­டது உறு­தி­செய்­யப்­பட்­டால், வெளி­நா­டு­களி­லி­ருந்து ஆள்­சேர்க்­கும் ஐஎஸ்­ஸின் பணியும் முக்­கி­யத் தலை­வர் ­களைத் தற்­காக்­கும் முயற்­சி­யும் தடைப்­படும் என அமெ­ரிக்கா கூறி­யுள்­ளது. அல் ‌ஷிஷானியை ஐஎஸ் அமைப்­பில் தனிப்­பட்ட அதி­ கா­ரம் கொண்ட பயங்க­ர­வாதப் போராளி என 2014ஆம் ஆண்டில் அமெ­ரிக்கா வகைப் ­படுத்­தி­யது. ஜார்­ஜி­யாவைச் சேர்ந்த அல் ‌ஷிஷானி அந்­நாட்டு ராணு­வத்­தில் முன்பு பணி­யாற்றி உடல் பிணி கார­ண­மாக அப்­ப­ணி­யி­லி­ருந்து 2012ஆம் ஆண்டு வில­கி­ய­வர். 2013ஆம் ஆண்டில் ஐஎஸ் அமைப்­பில் சேர்ந்த அல் ஷா‌ஷினி, பயங்க­ர­வா­தி­களைப் போருக்­குத் தயார்ப்­படுத்­தும் திறனால் அவ்­வமைப்­பில் உயர்­ ப­தவி­களை அடைந்த­தாகக் கூறப்படு­கிறது.