மலேசிய பிரதமர் நஜிப் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கைது

மலேசிய பிரதமர் நஜிப் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கைது

1 mins read

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் நஜிப் நிகழ்ச்சியில் போலிசாரின் உத்தரவு களை மதிக்காத இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் கைது செய்யப் பட்டனர் என்று சரவாக் போலிசார் நேற்றுத் தெரிவித்தனர். சரவாக் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைவர் தேவ் குமார், "இரு ஆஸ்திரேலியர்களும் பாதுகாப்பு எல்லையைக் கடந்து பிரதமர் நஜிப்புக்கு நெருக்கமாகச் செல்ல முயற்சி செய்தனர்," என்றார். செந்தோசாவில் உள்ள தாருல் எஹசான் பள்ளிவாசலுக்கு பிரதமர் நஜிப் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டபோது இரு வரும் அத்துமீறியதாகக் கூறப் பட்டது. "இரவு 8.35 மணியளவில் சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத அவர்கள் கைது செய்யப்பட்டனர்," என்று நேற்று வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆஸ்திரே லியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் தமது செய்தியாளர் லிண்டன் பெஸ்ஸரும் ஒளிப்பதிவாளர் லூயிஸ் எரோக்லுவும் கூச்சிங்கில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தது. கைது செய்யப்பட்ட இரு செய்தியாளர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய கடவுச்சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நஜிப்பிடம் ஊழல் குறித்து கேள்வி கேட்க முயற்சி செய்த இரு செய்தி யாளர்கள் கைது செய்யப்பட்டு மலேசியாவிலிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டதாக 'ஏபிசி' குறிப்பிட்டது.

பிரதமர் நஜிப்பிடம் கேள்வி கேட்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் மலேசியாவிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி