மலேசிய ஏர்லைன்ஸ் மீது ஆஸ்திரேலியாவில் வழக்கு

மலேசிய ஏர்லைன்ஸ் மீது ஆஸ்திரேலியாவில் வழக்கு

1 mins read
892140f5-892d-41e9-a8d9-658a82038cc6
-
Google News Preferred Icon

சிட்னி: MH370 விமானத்தில் பயணம் செய்த நியூ சிலாண்டர் பால் வீக்சின் குடும்பத்தினர், ஆஸ்திரேலியாவில் மலேசிய ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளனர். விமானம் காணாமல்போன பிறகு மனஉளைச்சலும் திடீர் அதிர்ச்சியும் ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். பெர்த் நகரில் வசித்த வீக்ஸ், காணாமல் போன MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளில் ஒருவர். 2014 மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் காணாமல் போனது.

ஆஸ்திரேலிய பயணியின் குடும்பத்தினர் வழக்குத் தொடுக்க முடிவு செய்து உள்ளனர். படம்: ஏஎஃப்பி