அதிபர்: பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பேன்

அதிபர்: பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பேன்

1 mins read
4199dd0a-ddfa-4424-8084-0fb2faed3aee
-

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் குறைந்தது 36 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன், பயங்கர வாதத்தை துடைத்தொழிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். அத்தாக்குதல், பயங்கர வாதத்தை எதிர்த்துப் போரிடும் துருக்கி நாட்டு பாதுகாப்புப் படையினரை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது என்றும் திரு எர்டோகன் கூறினார். துருக்கியிலும் ஈராக்கிலும் குர்தியப் போராளிகள் மீதான தாக்குதலை துருக்கிய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அங்காராவில் பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 125 பேர் காயமடைந் தனர்.

அத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட புலன்விசாரணை முடிந்ததும் அதற்குக் காரண மானவர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என்று துருக்கி நாட்டு உள்துறை அமைச்சர் இஃப்கான் அலா கூறினார். அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தடை செய்யப்பட்ட குர்திய பாட்டாளிகள் கட்சி அத்தாக்கு தலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசாங்கம் சந்தேகிக் கிறது. துருக்கியில் குர்தியப் போராளிகள் அண்மைய மாதங் களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். அங்காரா வில் குர்தியப் போராளிகள் பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.