முன்னாள் பிரதமர் மகாதீரை கடுமையாகச் சாடிய நஜிப்

முன்னாள் பிரதமர் மகாதீரை கடுமையாகச் சாடிய நஜிப்

1 mins read
9c6bb63d-8f97-4216-a7c5-10c5a5f53063
-

கோலாலம்பூர்: திரு மகாதீர் முகம்மது பிரதமராக இருந்தபோது அவரை கடுமையாகக் குறை கூறியவர்களுடன் அவர் தற்போது சேர்ந்து கொண்டிருப்பதை பிரதமர் நஜிப் ரசாக் கடுமையாகச் சாடியுள்ளார். திரு மகாதீரின் தலைமைத்துவத்தின்போது அவருக்கு வலுவான எதிர்ப்பு இருந்ததை திரு நஜிப் சுட்டிக் காட்டினார். கொடுங்கோலர் என்றெல்லாம் திரு மகாதீரை எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அத்தகையோருடன் தற்போது திரு மகாதீர் சேர்ந்து அமர்ந்திருந்ததை திரு நஜிப் கடுமையாகச் சாடினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது திரு நஜிப் இவ்வாறு கூறினார். திரு மகாதீர் அண்மையில் எதிர்த்தரப்பு தலைவர்களுடனும் மேலும் சில தலைவர்களுடனும் சேர்ந்து திரு நஜிப் பதவி விலகக் கோரும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.