அமெரிக்க மாணவருக்கு வடகொரியாவில் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை

அமெரிக்க மாணவருக்கு வடகொரியாவில் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை

1 mins read
7b4c082e-779d-4fa0-be91-b51e3de9ccee
-

சோல்: அமெரிக்க மாணவர் ஒருவருக்கு வடகொரியாவில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. வடகொரியாவுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் அத்தண்டனையை விதித்துள்ளதாக வடகொரியத் தகவல்கள் கூறின. வெர்ஜினியா பல்கலைக்கழக மாணவரான வாம்பியர் கடந்த ஜனவரி மாதம் வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். அந்த மாணவர் ஜனவரி மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டலிலிருந்து ஒரு பிரசார அடையாள சின்னத்தை திருட முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக வடகொரியா கூறியது. சுமார் 21 வயதான வாம்பியர் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வடகொரியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவரான வாம்பியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்