பாகிஸ்தான்: அரசாங்க ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குண்டுவெடித்து 15 பேர் பலி

2 mins read
805b7dbc-b58b-475c-ae68-10a0166c9a35
-

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று அரசுப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததில் 15 பேர் மாண்டனர்; 25 பேர் காயமடைந்தனர். மர்டான் நகரிலிருந்து தலை மைச் செயலக ஊழியர்கள் பெஷா வருக்கு வந்தபோது இச்சம்பவம் அரங்கேறியது. அந்தப் பேருந்தின் பின்புறம் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சொன் னார் போலிஸ் கண்காணிப்பாளர் முகம்மது கா‌ஷிஃப். இரவு நேரத்தில் அந்தப் பேருந்து அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் படுவது வழக்கம் என்றும் காலை தொழுகைக்குப் பின் அது இயக் கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

அரசாங்க ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்து என்றபோதும் அது தனியாருக்குச் சொந்தமா னது என்பதால் சம்பந்தப்பட்ட ஒப் பந்ததாரர்தான் அவர்களின் பாது காப்பிற்குப் பொறுப்பேற்க வேண் டும் என்றும் தனியார் வாகனங் களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாது என்றும் கூறினார் கைபர் பக்துன்குவா மாநில தகவல் ஆலோசகர் முஷ்டாக் கனி. பெஷாவரில் தலைமைச் செய லக ஊழியர்கள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத் தப்பட்டது இது முதன்முறையல்ல. கடந்த 2012, 2013ஆம் ஆண்டு களில் நிகழ்ந்த இதுபோன்ற தாக் குதல்களில் 38 பேர் கொல்லப் பட்டனர். இதற்கிடையே, அண்மைய தாக் குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபும் தெஹ்ரீக்-இ- இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல உயிர்களைப் பலிகொண்ட வெடிகுண்டு தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் பேருந்தில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என்று ஆராயும் பாகிஸ்தான் போலிசார். படம்: ஏஎஃப்பி