பிரேசிலில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரேசிலில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read
f585ccb5-3d53-4259-ada6-59106726b0e4
-

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் அதிபருக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரேசில் அதிபர் டில்மா ருசெஃப் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கு முன்பு திரண்டனர். பல்வேறு ஊழல் விவகாரங்களில் திருமதி டில்மா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தினரைக் கலைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கையெறி குண்டுகளை வீசியதாக வும் தகவல்கள் கூறின. அதிபருக்கு எதிரான ஆர்ப் பாட்டங்கள் தொடரும் என்று ஆர்பாட்டக்காரர்கள் அறிவித் துள்ள நிலையில் அதிபருக்கு ஆதரவாக பல இடங்களில் ஒன்றுகூட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.