ஐஎஸ் சந்தேக நபர்கள் 13 பேர் மலேசியாவில் கைது

ஐஎஸ் சந்தேக நபர்கள் 13 பேர் மலேசியாவில் கைது

1 mins read
1d19ba5f-4860-42d4-8879-689728139dad
-

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப் பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 13 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் சிறப்புப்படை போலிசார் புதன்கிழமை மேற் கொண்ட அதிரடி சோதனை யின்போது அந்த 13 பேர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அந்த அதிரடி சோதனையின் போது ஐஎஸ் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாகவும் திரு காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.

மலேசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத் திலும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அமைக்கப்படும் என்றும் காலிட் ஒரு பேட்டியில் தெரிவித் திருப்பதாக தி ஸ்டார் தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதல் பற்றிய சிறு தகவல் கிடைத்தாலும் மலேசிய அதிகாரி கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தாக்குதல் நடக்கும்வரை காத் திருக்க முடியாது என்பதையும் பிரசல்ஸ் விமான நிலையத் தாக்குதல் தெளிவாக உணர்த்து கிறது என்றும் திரு காலிட் கூறினார்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, மலேசிய அரசாங்கம் பயங்கரவாத அச்சுறுத்தல் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாதத்துடன் தொடர் புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மலேசியப் போலிசார் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.