பிரசல்ஸில் நீடிக்கும் பதற்றம்

பிரசல்ஸில் நீடிக்கும் பதற்றம்

1 mins read
a6a9f4a1-bd73-45c2-9fc7-217a2b8cab86
-

பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் பயங்கர வாதிகளைத் தேடி வரும் போலிசார், சந்தேக நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த நபர் காலில் காயமுற்று கீழே விழுந்தார். அந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த நபரை பயங்கரவாத சந்தேக நபர் என்று கருதி பெல்ஜியப் போலிசார் தவறுதலாக சுட்டுவிட்டதாக ஸ்கை நியூஸ் தகவல் கூறுகிறது. அந்த நபருக்கு பிரெஞ்சு மொழி தெரியாததால் போலிசாரின் ஆணைக்கு அவர் அடிபணிய வில்லை என்று கூறப்படுகிறது. அந்த சந்தேக நபர் காலில் சுடப்பட்டதை நேரில் பார்த்த சிலர் அதுபற்றிக் கூறினர்.

அந்த நபர், பஸ் நிறுத்தும் இடத்தில் அமர்ந்திருந்தார். அவர் தன் மகளை மடியில் வைத்திருந்தது போல் தெரிந்தது. அந்த இடத்தைவிட்டு நகராதே என்ற சத்தத்தைக் கேட்டோம். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பின்னர் போலிசார் அங்கு வந்து அந்த நபரைக் கைது செய்தனர். அந்தச் சிறுமி தற்போது போலிஸ் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிகிறது," என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். காலில் சுடப்பட்ட அந்த நபர் சூட்கேஸ் வைத்திருந்ததாகவும் அதில் வெடிபொருள்கள் இருந்த தாகவும் மற்றொரு தகவல் கூறியது.

பிரசல்ஸில் ஸ்சார்பீக் வட்டாரத்தில் காலில் சுடப்பட்ட சந்தேகப் பேர்வழியை போலிசார் இழுத்துச் செல்கின்றனர். வீடியோ படம்: ராய்ட்டர்ஸ்