காருக்குள் மின்ஊட்ட சாதனம் வெடித்து சிதறியது

காருக்குள் மின்ஊட்ட சாதனம் வெடித்து சிதறியது

1 mins read
0c406d4d-a62e-416a-9aec-6d77f2e08717
-

கோலாலம்பூர்: காருக்குள் ஒருவர் விட்டுச்சென்ற தொலைபேசி மின்ஊட்ட சாதனம் ஒன்று வெடித்து சிதறியது. நல்லவேளையாக அந்த காருக்குள் அப்போது யாரும் இல்லாததால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று காரின் உரிமையாளரான 72 வயது பொறியாளர் ஒருவர் கூறினார். மலேசியாவில் மார்ச் 19ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த சம்பவம் பற்றிக் கூறிய வேலை ஓய்வு பெற்றவரான திரு டான் ஹெங் சுவீ தனது காரை ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள ஒரு சங்கத்திற்கு அருகே நிறுத்திவிட்டு தன் மனைவியுடன் அருகில் உள்ள உணவுக்கடைக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றதாகக் கூறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு விரைந்துவந்த கார்ப்பேட்டை ஊழியர் ஒருவர் தனது காரிலிருந்து தீப்புகை வந்ததாகக் கூறியதும் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்ததாக அவர் சொன்னார். கடும் வெயில் காரணமாக மின்ஊட்ட சாதனம் வெடித்ததாக தான் கருவதாக அவர் சொன்னார்.

மின்ஊட்ட சாதனம் வெடித்ததில் சேதமடைந்த கார். படம்: தி ஸ்டார்