கிட்டத்தட்ட 90,000 மலேசியரிடம் பல்வேறு துப்பாக்கி உரிமங்கள்

கிட்டத்தட்ட 90,000 மலேசியரிடம் பல்வேறு துப்பாக்கி உரிமங்கள்

2 mins read
c392e51e-a21b-4a57-af0b-6604ddce8810
-

துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொள்ள 89,771 மலேசி யர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாஹிட் ஹமிதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அந்த உரிமங்கள் வழங்கப்பட்ட விவரத்தை நேற்று நாடாளுமன்றத்தில் விவரித்தார் அமைச்சர். மலேசியர்கள் துப்பாக்கி வைத் திருப்பதற்கான உரிமம் குறித்து ஜனநாயக செயல் கட்சி உறுப்பினர் கா கோர் மிங் வினவியதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஹமிதி, கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள 12,917 உரிமமும் 'ரிவால்வர்' எனப்படும் சுழல் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள 1,789 உரிமமும் வழங்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 'ரைஃபிள்' எனப்படும் பெரிய வகை துப்பாக்கியை வைத்துக்கொள்ள 2,243 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொன்ன அமைச்சர், ஆக அதிக மான உரிமம் வேட்டைத் துப்பாக் கிகளுக்கே வழங்கப்பட்டுள்ளதாக வும் அந்த எண்ணிக்கை 63,145 என்றும் தெரிவித்தார்.

துப்பாக்கிகளின் வரிசையில் 7,731 குழாய் வடிவிலான வேட்டைத் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதர வகை ஆயுதங்களுக்காக 1,946 உரிமங்களும் வழங்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஹமிதி, துப்பாக்கி ஆயுதக் கடத் தலைத் தடுப்பது குறித்து மன்றத் தில் பேசினார். அதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்புக் குற்றச்சட்டத்தின் கீழ் உள்ளதாக அவர் கூறினார். 'ஓப்ஸ் கந்தாஸ்' தொடர்பான நடவடிக்கைகளும் நாட்டின் எல்லை மற்றும் நுழைவு வாயில்களைத் தீவிரமாகக் கண்காணிப்பதும் துப்பாக்கிக் கடத்தலை முறியடிக்க உதவியுள்ளதாக திரு ஹமிதி தெரிவித்தார். கடத்தலைக் கண் காணிக்க கடலோரக் காவல் படை போன்ற அமலாக்க அதிகாரிகள் அண்டை நாடுகளுடன் அணுக்க மாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.