மியன்மாரில் முதல் ஜனநாயக அதிபர் பதவியேற்பு

மியன்மாரில் முதல் ஜனநாயக அதிபர் பதவியேற்பு

2 mins read
33bbe671-533d-40ea-9c3a-c6b9ca8b08bc
-

யங்கூன்: மியன்மாரின் புதிய அதிபராக தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த திரு டின் கியவ் பதவி ஏற்றுக்கொண்டார். ஐம்பது ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு மியன்மாரின் முதல் ஜனநாயக அதிபராக திரு டின் பொறுப்பேற்றுக் கொண் டுள்ளார். சுமார் 69 வயதாகும் திரு டின், திருவாட்டி ஆங் சான் சூச்சியின் நெருங்கிய உதவியாள ரும் குடும்ப நண்பரும் ஆவார். மியன்மார் தலைநகரில் நேற்று நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு டின் கியவ், பதவி விலகும் தியன் செய்னிடமிருந்து அதிபருக் கான சின்னத்தைப் பெற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பின்னர் உரையாற்றிய திரு டின் கியவ், "மியன்மார் மக்களுக்கு உண்மை யுடன் இருந்து எனது கடமையை நிறைவேற்றுவேன்," என்று உறுதியளித்தார். மிண்ட் சுவீ, ஹென்ரி வான் தியோ ஆகிய இருவரும் துணை அதிபர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம், தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவியான ஆங் சான் சூச்சி அதிபராவதை தடை செய்த போதிலும் அதிபருக்கும் மேலான பதவியை தாம் வகிக்கப் போவதாகவும் ஆட்சியை நிர்வகித்து நடத்தப்போவதாகவும் திருவாட்டி சூச்சி ஏற்கெனவே கூறியுள்ளார். அதிபராக அவர் ஆக முடியா விட்டாலும் அமைச்சரவையில் அவர் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். சுமார் 70 வயதாகும் ஆங் சான் சூச்சி, வெளியுறவு, கல்வி உள்ளிட்ட நான்கு முக்கிய பொறுப் புகளை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய நிர்வாகம் இன்று பணியைத் தொடங்கிய போதிலும் நாளை முதல் முழுமையான அதிகாரத்துடன் பணியாற்றும்.

மியன்மாரின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட டின் கியவ், பதவி விலகும் முன்னாள் அதிபர் தியன் செய்னிடமிருந்து அதிபருக்கான சின்னத்தைப் பெற்றுக்கொள்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ராணுவத்தைச் சாராத ஒருவர் அதிபராகியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்