சூச்சிக்கு முக்கியப் பதவி; ராணுவம் கடும் எதிர்ப்பு

சூச்சிக்கு முக்கியப் பதவி; ராணுவம் கடும் எதிர்ப்பு

1 mins read
313fb11f-abcd-4654-b37d-d24206dc46c3
-

யங்கூன்: அரசாங்கத்தில் ஆங் சான் சூச்சிக்கு சக்திவாய்ந்த பதவி வழங்குவதை அனுமதிக்கும் மசோதா நேற்று ராணுவத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவால் உரு வாக்கப்பட்ட அரசு ஆலோசகர் என்ற புதிய பதவி மூலம் அமைச் சர்களுக்கு இடையே ஆங் சான் சூச்சி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட முடியும். அரசாங்கத்தில் திருவாட்டி சூச்சி கூடுதல் அதிகாரத்துடன் நாட்டை நிர்வகித்து வழி நடத்தவும் புதிய பதவி வகை செய்கிறது. மேலும் இந்தப் பொறுப்பு, பிரதமர் பதவிக்கு ஈடானது என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு ராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங் சான் சூச்சி அதிபராக பொறுப்பு ஏற்பதை அந்நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம் தடைசெய்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பரும் உதவியாளருமான 69 வயது டின் கியவ் அதிபராக பதவி ஏற்றுள் ளார்.