பாக். தாக்குதலில் பலியானோருக்கு பிரார்த்தனை

பாக். தாக்குதலில் பலியானோருக்கு பிரார்த்தனை

1 mins read
efea8f6a-d28d-47a6-8889-53e162df966f
-

பாகிஸ்தானின் லாகூரில் மார்ச் 27ஆம் தேதி கிறிஸ்துவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றைக் குறிவைத்து ஒரு பூங்காவில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் பச்சிளங்குழந்தைகள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கடுமையாகக் காயமடைந்தனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நேற்று அந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி