பேங்காக்: தாய்லாந்தின் மேற்கில் உள்ள நக்கோன் பாத்தோம் வட்டாரத்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் சென்ற மூவர் கொல்லப்பட்டனர். அந்தப் பேருந்தில் தொழிற்சாலை ஊழியர்கள் கோ சாமுய் தீவுக்கு சுற்றுலாப் பயணம் சென்றதாக அங்குள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயணிகள் மூவர் இறந்தது மட்டும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎப்பி
தாய்லாந்து: ரயில் - பேருந்து மோதல்; மூவர் பலி
1 mins read
-

