நாடற்ற பதின்ம வயதினருக்கு மலேசிய குடியுரிமை

1 mins read
f068e318-2f7a-4283-b04b-a783705f3b6b
-

புத்ராஜெயா: பதினேழு ஆண்டு களுக்குப் பிறகு நவின் மூர்த்தி, மலேசிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். மலேசியாவில் பிறந்த அவர் இதுநாள் வரை நாடற்றவராக வாழ்ந்துவந்தார். கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த அவர், மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்கப் பட்டு தேசிய அடையாள அட்டையை விரைவில் பெறுவார் என்று 'த ஸ்டார் ஆன் லைன்' வெளியிட்ட செய்தி குறிப் பிட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சு அவருக்கு அதிகாரபூர்வ அங்கீகாரக் கடிதத்தை வழங்கியது. நவினின் தந்தை மலேசியர். தாயார் பிலிப்பீன்ஸ் நாட்டவர். நவினுக்கு இரண்டு வயதான போது குடியுரிமை அல்லாதவர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். நவினின் தந்தையான மூர்த்தி, மகனுக்கு குடியுரிமை கேட்டு இரண்டு முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் இரண்டு முறையும் நிராகரிக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நவினுக்கு குடி யுரிமை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதனை எதிர்த்து மலேசிய அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நவினின் வழக்கறிஞர் அன்னாவ் சேவியர், "நாடற்ற வராக இருந்தவர் தற்போது மலேசியாவின் ஆகப்பெரிய குடும்பத்தின் அங்கமாக மாறியிருக்கிறார்," என்றார்.

ஏப்ரலில் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்ற நவின் மூர்த்தி. படம்: இணையம்