பாரிஸ், பிரசல்ஸ் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய வன் என்று நம்பப்படும் முகமட் அப்ரினி உட்பட ஐவரை பெல்ஜிய போலிசார் கைது செய்துள்ளது. பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் 130 பேரைப் பலிவாங்கிய தாக்குதல் தொடர்பில் அந்த 31 வயதான பெல்ஜிய நாட்டவர் தேடப்பட்டு வந்தார். மார்ச் 22ஆம் தேதி பிரசல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய மூன்றாவது குண்டுதாரி எனக் கூறப்படும் 'தொப்பி அணிந்த மனிதர்' முகமட் அப்ரினியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும் மூன்றாவது ஆள் முகமட் அப்ரினியாகத்தான் இருக்கும் என பெல்ஜிய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
பெல்ஜியத்தை சேர்ந்தவர் களால் பாரிஸ், பிரசல்சில் நடந்த தாக்குதல்களைத் தடுக்கத் தவறி யதாக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த பெல்ஜிய பாதுகாப்புத் துறையினருக்கு இந்தக் கைது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. முன்னதாகத் தற்கொலையாளி களில் ஒருவரைக் கைது செய்யத் தவறியதால், பதவி விலக முன் வந்த உள்துறை அமைச்சர் ஜான் ஜாம்போன், கைது நடவடிக்கையில் ஈடுபட்டோரை டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
எனினும் தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அவர், "பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்," என்றார். பாரிஸ் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர், அத்தாக்குதலில் முக்கிய சந்தேகநபரான சாலே அபடேசலாமுடன் அப்ரனி பாரிஸை நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த கார் இருநாட்கள் கழித்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது. அபடேசலாம் கைது செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, சகோதரர்கள் பிராஹிம், காலிட் அல் பக்குரியி இருவரும் உள்ளூர்காரரான நஜிம் லாகரோய் ஆகியோர் பிரசல்சல் விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் நடத்திய தாக்குதலில் 32 பேர் இறந்தனர்.2016-04-10 06:00:00 +0800
பிரசல்ஸ் அருகேயுள்ள ஆண்டர்லெக்ட் எனும் இடத்தில் முகமட் அப்ரனியை பெல்ஜிய நாட்டு போலிசார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். அங்கு நடைபெற்ற அதிரடி சோதனையின்போது சந்தேகத்துக்கு உரியவரை போலிசார் கைது செய்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

