இந்தியா, பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 6 பேர் பலி

இந்தியா, பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 6 பேர் பலி

1 mins read

புதுடெல்லி: வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 28 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. இந்த நிலநடுக்கம் இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு எல்லையை ஒட்டிய பகுதிகளிலும், தஜிகிஸ்தானிலும் 236 கி.மீ. ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆகிய பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களில் இந்த சிறுவனும் ஒருவன். படம்: ஏஎஃப்பி