பிள்ளைகளின் வாக்கு டிரம்ப்புக்கு இல்லை

பிள்ளைகளின் வாக்கு டிரம்ப்புக்கு இல்லை

1 mins read
1a876571-bd28-4a9c-bba2-dbd9aaeb3703
-

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராவதற்கு முன்னோடித் தேர்தல்களில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்புக்கு அவருடைய பிள்ளைகளின் வாக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் எரிக் டிரம்ப், ஐவன்கா டிரம்ப் ஆகிய அவருடைய வாரிசுகள் வாக்காளர் களாகப் பதிவு செய்துகொள்வதற் கான காலக்கெடுவை தவற விட்டனர்.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளராவதற்கான வாக்குப் பதிவில் முன்னணியில் இருக்கும் டோனல்ட் டிரம்ப்புடன் அவரது இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளான ஐவன்கா டிரம்ப், 34, எரிக் டிரம்ப், 32, ஆகிய இருவரும் தந்தையின் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நியூயார்க் முன்னோடித் தேர்தலில் அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

டோனல்ட் டிரம்ப்பின் இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளான எரிக் டிரம்ப், ஐவன்கா டிரம்ப். படம்: இணையம்