இந்திய இளையர் சாதனை

இந்திய இளையர் சாதனை

1 mins read
d26e3755-0f16-4a9c-8af3-fed555671464
-

அமெ­ரிக்­கா­வில் வசிக்­கும் 16 வயது முகுந்த் வெங்க­ட­கி­ருஷ்­ணன் 4,000 ரூபாயில் காது கேளா­தோ­ருக்­கான கரு­வியைத் தயா­ரித்­துள்­ளார். கர்­நா­டக மாநி­லத்தை பூர்­வீ­க­மா­கக் கொண்ட முகுந்த் கெண்டக்கி மாநிலத்­தில் டுபான்ட் மேனுவல் உயர்­நிலைப் பள்­ளி­யில் பயில்கிறார். இரண்டு ஆண்டு முயற்­சி­யில் அவர் உரு­வாக்கியுள்ள இக்கருவியில் தேவைக்­கேற்ப ஒலியின் அளவைக் கூட்டி, குறைத்­துக்கொள்­ள­லாம். பல்வேறு சோதனை­களுக்கு உட்­படுத்­தப்­பட்டு,

சரிபார்க்கப் பட்டுள்ள இக்கருவியை விலை குறைவான ஹெட்­போன்களி­லும் பயன்­படுத்தலாம். "காது கேளா­தோ­ருக்­கான கரு­வி­யின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையில் இருக்­கிறது. ஆனால் நான் உருவாக்கியுள்ள கருவியை ரூ.4,000க்குத் தயா­ரிக்க முடியும்" என்ற முகுந்த் பெங்களூருவில் வசிக்கும் தனது தாத்தாவுக்கு இக்கருவியை வழங்க உள்ளார்.