பனாமா சட்ட நிறுவன அலுவலகத்தில் சோதனை

பனாமா சட்ட நிறுவன அலுவலகத்தில் சோதனை

1 mins read
7f878acc-db74-4b96-a8e5-31c7c1ab123b
-

பனாமா சிட்டி: பனாமா சட்ட நிறுவனத்தின் தலைமையகங்களில் போலிசார் நேற்று சோதனை மேற்கொண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அரசாங்கத் தரப்பு வழக் கறிஞர் ஜேவியர் கரவாலோ உத்தரவின்பேரில் போலிஸ் அதிகாரிகள் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவன தலைமையகத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சட்ட நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களைப் பெறுவதற்காக போலிசார் அந்த சோதனையை மேற்கொண்டதாக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் பின்னர் தெரி வித்தது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த துணை நிறுவனங்களின் அலுவலங்களிலும் போலிசார் சோதனை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.