கோலாலம்பூர்: மின்னூட்டத்தில் இருந்த கைபேசியில், மின்சார இணைப்பை அகற்றாமல் பேசிய சுகானா முகமது, 30, என்ற பெண்மணி மின்சாரம் தாக்கி எரிந்து இறந்தார். கோலாலம்பூரின் புறநகர் பகுதியான செராசில் தாமான் தேசா பைடூரியில் சுகானாவின் வீட்டில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த சம்பவம் நடந்தது. அப்போது அந்தப் பெண்ணின் கணவரும் புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் போலிசுமான ராஜா அஸ்ரி ராஜா மட் உறங்கிக் கொண்டிருந்தார். சுகானாவை மருத்துவமனைக்கு உடனே தூக்கிச் சென்ற போதிலும் அங்கே சென்றடைந்தபோது அவர் இறந்து விட்டார் என்று காஜாங் மாவட்ட போலிஸ் அதிகாரி கூறினார். சுகானாவின் உடல் கிளந்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மின்னூட்டத்தில் இருந்த கைபேசியில் பேசிய பெண் பலி
1 mins read

