கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரரும் சிஐஎம்பி குழுமத் தலைவருமான நசிர் ரசாக், 7 மில்லியன் அமெரிக்க டாலர் விவகாரம் குறித்த விசாரணை சுதந்திரமாக நடப்பதற்கு ஏதுவாகத் தாம் விடுப்பில் செல்வதாக அறிவித் துள்ளார். சிஐஎம்பி குழுமத்தின் 59வது ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் கூட் டத்தில் திரு நசிர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவின் 2013ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நஜிப்பிடமிருந்து 7 மில்லியன் அமெரிக்க டாலர் திரு நசிரின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை இடையூறு எதுவும் இல்லாமல் நடப்பதற்கும் சிஐஎம்பி வங்கியின் நேர்மையைக் கட்டிக்காப்பதற்கும் தாம் விடுப்பில் செல்லத் தீர்மானித்ததாக திரு நசிர் கூறினார்.

