குவிட்டோ: தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையோர நாடான இக்வடோரில் மீண்டும் நேற்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகினது. அதை அடுத்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 1,700 இன்னும் பேரைக் காணவில்லை என்றும் அதனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் ஆத்திரம டைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 800 கட்டடங்கள் அந்த நிலநடுக்கத்தில் தரை மட்டம் ஆகின. குறைந்தது 4,000 பேர் காயமடைந்தனர்.
இக்வடோரில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
1 mins read

