கொலை முயற்சியில் முடிந்த முக்கோணக் காதல்

கொலை முயற்சியில் முடிந்த முக்கோணக் காதல்

1 mins read

மலாக்கா: கைவி­லங்­கிட்டு ஆற்றில் மூழ்­க­டிக்­கப்­பட்ட 26 வயது ராணுவ கமாண்டோ அதிகாரி ஆச்­ச­ரி­ய­க­ர­மாக உயிரோடு மீட்ட சம்ப­வம் மிகுந்த பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. முக்­கோ­ணக் காதல் இந்தக் கொலை முயற்­சிக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று நம்பப் ­படு­கிறது. சுங்கய் உடாங் ராணுவ முகாமில் அந்த கமாண்டோ அதிகாரி இன்னொரு ஆணின் மனை­வி­யு­டன் தொடர்பு வைத்­தி­ருந்த­தாக சந்­தே­கத்­தின் பேரில் ஏற்­பட்ட வன்மம் இந்தக் கொலை முயற்­சி­யில் முடிந்தது. அதே முகாமில் இன்னொரு பிரிவில் அந்தப் பெண்ணின் கண­வ­ரும் பணி­யாற்­றி­வந்தார்.