நியூயார்க்கில் ஹில்லரி, டிரம்ப் அமோக வெற்றி

நியூயார்க்கில் ஹில்லரி, டிரம்ப் அமோக வெற்றி

1 mins read

நியூயார்க்: நியூயார்க் மாநிலத்தில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட் பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப், ஹில்லரி கிளிண்டன் ஆகிய இருவரும் இதுவரை இல்லாத வெற்றி பெற்றுள்ளனர். குடியரசுக் கட்சி வேட்பாளரான ஹில்லரி கிளிண்டனுக்கு ஆதர வாக 60.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. குடியரசுக் கட்சி வேட்பாளரான அவரது போட்டி யாளரான பெர்னி சான்டர்ஸ் 39.5 விழுக்காடு வாக்குகளை பெற்று உள்ளார். டிரம்ப் 65.1 விழுக்காடு வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகளின் ஓட்டுகளைப் பெற்றாக வேண்டும். இதுவரை 1,307 வாக்குகளை பெற்றுள்ள ஹில்லரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டி யாளரான பெர்னி சாண்டர்ஸ் 1,094 வாக்குகளுடன் இரண்டா வது இடத்தில் உள்ளார்.