கோலாலம்பூர்: சிலாங்கூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மலேசியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து இழப்பீடு கோரி அந்த மருத்துவமனைக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்திருந்தார். வான் ஹலிமி மெஹ்ராவி என்பவர் கடந்த மே மாதம் கேபிஜே சிலாங்கூர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட மதிய நேர காய்கறி உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தாராம். அந்த உணவைச் சாப்பிட்டதைத் தொடர்ந்து வாந்தி, வயிற்று வலியால் தான் அவதிப்பட்டதாக அவர் கூறினார். அவருக்கு அந்த மருத்துவமனை மொத்தம் 67,000 ரிங்கிட்(S$23,000) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
உணவில் கரப்பான் பூச்சி; மலேசியருக்கு S$23,000 இழப்பீடு
1 mins read

