பெய்ஜிங்: சீனாவில் ரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பைத் தொடர்ந்து அங்கு தீப்பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். தீயணைப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு தீயை அணைத்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்தில் உயிர் சேதமோ யாருக்கும் காயமோ இல்லை என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயனக் கிடங்கில் மூண்ட தீயில் 165 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் ரசாயனக் கிடங்கில் பயங்கர வெடிப்பு
1 mins read

