மேல்மருவத்தூர்: திமுக பொரு ளாளர் மு. க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே மேல் மருவத்தூரில் பங்காரு அடிக ளாரிடம் ஆசிபெற்று அம்மனை வழிபட்டார். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் வியாழக் கிழமை சித்திரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் இரவு 10:45 மணிக்கு ஸ்டாலின் மேல்மருவத் தூர் சித்தர்பீட வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கினார். அடுத்த நாள் பிற்பகல் 1:00 மணிக்குத் தனியாக ஸ்டாலின் சித்தர்பீடம் வந்தார்.
அப்போது பங்காரு அடிகளாரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றார். பின்னர் பங் காரு அடிகளாருடன் ஸ்டாலின் தனியாக அரை மணி நேரம் பேசினார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1:45 மணிக்கு ஆதி பராசக்தி அன்னையை 108 முறை போற்றி அர்ச்சனை செய்து வழி பட்டார் ஸ்டாலின். அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் பிற்பகல் 3:30 மணிக்குச் சித்தர் பீடத்திலிருந்து பிரசாரத்துக்குப் புறப்பட்டார். பிர சாரத்தில் பேசிய ஸ்டாலின், "தற் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் 'சூப்பர் ஹீரோ' அதாவது தமிழகத்தை ஜெயலலிதா என்ற வில்லியிடமிருந்து காக்க வந்த ஹீரோ" என்றார்.

