டொபேக்கா: அமெரிக்காவின் கான்சஸ் மாநிலத்திலுள்ள டொபேக்கா என்ற நகரில் உள்ள ஹோட்டலில் சட்டத்தின் பிடி யிலிருந்து தப்பிச் சென்றுள்ள ஒர்லாண்டோ கோலின்ஸ் என்ற சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும் முயற்சியில் அமெரிக்க குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று ஈடுபட்டனர். இதில் அந்த ஹோட்டலி லிருந்து சந்தேக நபர் என்று நம்பப்படுபவருடன் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதி காரிகள் காயமடைந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. எனினும், அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்காவின் கான்சஸ் மாநிலத்திலுள்ள டொபேக்கா என்ற நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து சந்தேக நபர் என்று நம்பப்படுபவருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதி காரிகள் காயமடைந்தனர். படம்: ஊடகம்

