தொடர் வெற்றிகளை குவிக்கும் டிரம்ப், ஹில்லரி

தொடர் வெற்றிகளை குவிக்கும் டிரம்ப், ஹில்லரி

1 mins read
da18cc21-3b3f-4ac0-9013-3e2822ba40fe
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தொழில் அதிபரான குடியரசுக் கட்சியின் டோனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டனும் அதிபர் வேட்பாள ராகப் பெயர் குறிப்பிடப்படுவற்கான முன்னோடிக் கட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

டோனால்ட் டிரம்ப் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மற்ற வேட் பாளர்களான டெட் குருஸ், ஜான் கசிச் ஆகிய இருவரையும் கனெக் டிகட், டெலாவேர், மேரிலேண்ட், பென்சில்வேனியா, ரோட் ஐலண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடை பெற்ற தேர்தல்களில் தோற்கடித் தார். இதன்மூலம், இதுநாள்வரை கட்சித் தலைமையின் ஆதரவு இல்லாத ஆனால் பொதுமக்களில் பலரின் ஆதரவைப் பெற்ற திரு டோனால்ட் டிரம்ப் அரசியலில் தனது பலத்தை நிரூபித்துள்ளார் என்று ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், குடியரசிக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படு வதற்கு தேவையான பேராளர்களின் எண்ணிக்கையில் திரு டிரம்ப்புக்கு இன்னும் 1,237 பேர் தேவைப்படுவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "என்னை நான் அதிபர் வேட் பாளராகவே கருதுகிறேன். என் னைப் பொறுத்தவரை அதிபர் வேட்பாளர் பிரச்சினை ஒரு முடி வுக்கு வந்துவிட்டது," என்று நியூ யார்க்கில் தனது ஆதரவாளர் களிடம் சொத்து மேம்பாட்டாளரு மான திரு டிரம்ப் கூறினார்.

நியூயார்க்கில் ஆதரவாளர்களிடம் பேசிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். படம்: ஏஎஃப்பி