வாஷிங்டன்: குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள டோனால்ட் டிரம்ப் தமது வெளிநாட்டுக் கொள் கையின் விவரங்களை வெளி யிட்டுள்ளார். ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற்ற கையோடு பேசிய அவர், 'அமெரிக்காவே முதன்மை' என்ற கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாகக் கூறினார். ஒபாமா நிர்வாகத்தின் வெளி நாட்டுக் கொள்கையை கடுமையாக விமர்சித்த அவர்,
அது ஒரு முழுமையான பேரிடர் என்றார். செவ்வாய்க்கிழமை அன்று பேசியபோது திரு டிரம்ப் தம்மை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் என்றே கூறிக் கொண்டார். கனெக்டிகட், டெலாவேர், மேரி லேண்ட், பென்சில்வேனியா, ரோட் ஐலண்ட் ஆகிய ஐந்து மாநிலங் களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிரம்ப் குடியரசுக் கட்சியில் தமக்கு எதிராகப் போட்டியிட்ட டெட் குருஸ், ஜான் கசிச் ஆகி யோரை தோற்கடித்தார்.
'அமெரிக்காவே முதன்மை' என்ற கொள்கையை பின்பற்றப் போவதாக டோனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி

