வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஐநா

வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஐநா

2 mins read

ஐநா: ஐநா தீர்மானங்களுக்கு எதிராக சக்திவாய்ந்த ஏவுகணை களை தொடர்ந்து சோதனை செய்துவரும் வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐநா செயலில் இறங்கியுள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் ஒன்று கூறுகிறது. நேற்று முன்தினம் இரண்டு மத்திம தூர ஏவுகணைகளை பாய்ச்சும் முயற்சியில் வட கொரியா ஈடுபட்டது. இந்நிலையில் மற்றொரு ஏவு கணையை வட கொரியா சோதிக்க ஆயத்தமாகி வருவதா கக் கூறப்படுவதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு மன்றம் அவசர ஆலோசனையில் ஈடு பட்டது. வட கொரியா கடந்த இரு வாரங்களில் பசிபிக் பெருங் கடலின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்கக் கூடிய மூன்று சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சோதிக் கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஐநாவின் நடவடிக்கை பற்றிக் குறிப்பிட்ட பாதுகாப்பு மன்றத்துக் கான சீனத் தூதர் லியு ஜியேயி, "பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்," என் றார். இதுபற்றிக் கூறிய ஜப்பானியத் தூதர் மோட்டோஹிடே யோ‌ஷிக்காவா, வட கொரியாவின் "ஆபத்தான, தெளிவான ஐநா பாதுகாப்பு மன்ற மீறல்களை" தமது நாடு கண்டிப்பதாகக் கூறி னார். ஐநா பாதுகாப்பு மன்றத்தின் 15 உறுப்பு நாடுகளும் வட கொரியாவைக் கண்டிப்பதில் ஒரு மனதாகச் செயல்பட்டதாக திரு யோ‌ஷிக்காவா தெரிவித்தார். ஐநா தீர்மானங்களின்படி, வட கொரியா எந்தவித ராணுவ ஏவு கணைகளையும் உற்பத்தி செய்யக் கூடாது என்றும் இதன் தொடர்பில் அதன் மீது புதிய தடைகள் விதிக்கும்படி கோரப்போவதாகவும் தென் கொரியா கூறியது.