நைரோபி: தந்தத்தை எடுப்பதற்காக ஆப்பிரிக்க கண்டத்தில் ஆண்டுதோறும் 30,000க்கு மேற் பட்ட யானைகள் வேட்டையாடப் பட்டு கொல்லப்படுகின்றன. இவ் வாறு வேட்டையாடப்படும் தந்தங் கள் ஆசிய நாடுகளுக்குத்தான் அதிக அளவில் விற்கப்படுகின் றன. சட்டவிரோத வியாபார நோக்கத்திற்காக யானைகள் கொல்லப்படுவதை கென்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. யானைகள் கொல்லப்படுவதை எதிர்த்து கென்யாவில் 105 டன் யானைத் தந்தங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.
சுமார் 8,000 யானைகளி லிருந்து சட்டவிரோதமாக எடுக் கப்பட்ட இந்தத் தந்தங்களின் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர். உலகளவில் இந்த அளவுக்கு அதிகமான தந்தங்கள் கொளுத் தப்பட்டது இதுவே முதல்முறை. நைரோபி நகரில் உள்ள தேசிய பூங்காவில் இவை எரிக்கப்பட்டன. யானைத் தந்த வியாபாரத் திற்குக் கடந்த 1989ஆம் ஆண்டு கென்யா முதல்முறையாகத் தடை விதித்தது. தந்தத்திலிருந்து தயாரிக்கப்படும் நகைகளுக்கும் நினைவுப்பொருட்களுக்கும்கூட தடை விதிக்கப்பட்டது.
கொத்து கொத்தாக 12 இடங்களில் தந்தங்கள் கொளுத்தப்பட்டன. படம்: ஊடகம்

