மேலும் நான்கு சடலங்கள் மீட்பு

மேலும் நான்கு சடலங்கள் மீட்பு

1 mins read

கூச்சிங்: மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் மேலும் நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வியாழனன்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் அதில் சென்ற துணை அமைச்சர் ஒருவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தேடி, மீட்கும் படையினர் நேற்று மேலும் நால்வரது உடல்களைக் கண்டுபிடித்து மீட்டனர். அவற்றில், தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலை, அமைச்சர் நோரியா கஸ்னானின் பாதுகாவலர் அகமது சோப்ரி ஹாருண் ஆகியோரின் சடலங்களும் அடங்கும். விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் அறுவர் பயணம் செய்த நிலையில் இன்னும் ஒருவரது நிலை என்னவானது என்று தெரியவில்லை.