டெவெசுலு: ருமேனியாவில் 800 மில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் ராணுவ ஏவுகணைத் தளம் ஒன்று நேற்று இயக்கப் பட்டுள்ளது. ஈராக், ரஷ்யாவின் ஏவுகணை முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கியுள்ள ஏவு கணைத் தளம் அது என்று கூறப் படுகிறது. இந்தத் தளத்திலிருந்து ஐரோப்பா வரை பாயக்கூடிய ஏவு கணைகளை அமெரிக்கா திட்ட மிட்டு வருவதாகத் தெரிகிறது. "ஈரான் தொடர்ந்து ஏவுகணை களை சோதித்து, மேம்படுத்தி வருகிறது," என்றார் அமெரிக்க ராணுவ ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவின் துணைச் செயலர் ஃபிராங் ரோஸ். போலாந்தில் இறுதியாக ஒரு ஏவுகணைக்கான தளத்தின் நில அகழ்வை இன்று அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை மாதம் அந்தத் தளம் நேட்டோவிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
ருமேனியாவில் அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தளம்
1 mins read

