தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

MH370: தேடும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையலாம்

1 mins read
1102f2d0-4518-43bd-b641-794a08e3ecac
-

கோலாலம்பூர்: 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானத்தைத் தேடும் பணி வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கடல் பகுதிக்கு அருகே 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய பகுதியில் ஆஸ்திரேலியக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேடுதல் பணி ஆகஸ்ட் மாதம் முடிவுறும் என்று ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மொத்தம் 239 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்தது.