வாஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை சீனாவின் போர் விமானம் ஒன்று ஆபத்தான வகையில் இடைமறித்ததாக அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் அந்த அத்துமீறலுக்கு அமெரிக்க அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீனப் போர் விமானம் அதிவேகத்தில் வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீன விமானம்
1 mins read

