இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய கடல் பகுதியில் நேற்று 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 38கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறினர். இந்தோனீசியாவில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு இவற்றின் காரணமாக அந்நாட்டு மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.