பாப்புவா நியூ கினி மாணவர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு

பாப்புவா நியூ கினி மாணவர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு

1 mins read
4174a026-bda7-476f-be26-df9462a4b3ca
-

சிட்னி: பாப்புவா நியூ கினியில் கடந்த ஒரு மாத காலமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் வலுத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அந்நாட்டுப் பிரதமர் பீட்டர் ஓ நெய்ல் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.