கோலாலம்பூர்: மலேசியாவில் பிப்ரவரி 15லிருந்து ஜூன் 13 வரையில் மறுவேலை வாய்ப்பின் கீழ் 124,279 வெளிநாட்டு ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி, "அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியவர்களுக்கும் வேலை அனுமதி சீட்டு காலாவதியானவர்களுக்கும் மட்டுமே இங்கு வேலை செய்ய 'பர்மிட்' வழங்கப்பட்டுள்ளது," என்றார். உள்துறை அமைச்சருமான திரு சாயிட், "சிலர் கூறுவதைப் போல வெளிநாட்டு ஊழியர்கள் வரவழைக்கப்படவில்லை," என்று கூறினார்.
மலேசியாவில் 120,000 வெளிநாட்டு ஊழியர்கள் பதிவு
1 mins read