சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் ஒருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அந்த எட்டு மாத காலத்தில் எத்தகைய துன்பத்தை அனுபவித்தார் என்பது பற்றி வெளிப்படையாக தெரிவித்ததைத் தொடர்ந்து சீனாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஹாங்காங்கில் உள்ள சீன அலுவலகத்திற்கு முன்பு திரண்ட ஜனநாயக ஆதரவு தொண்டர்கள் சுமார் 40 பேர், சீனா தடுத்து வைத்துள்ள ஹாங்காங் தொண்டர்கள் ஐவரையும் விடுவிக்க சீனாவை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.