ஹனோய்: வியட்னாமில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு விமானம் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணிக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. வியட்னாம் கேட்டுக்கொண்டதன் பேரில் சீனா அதன் மீட்புப் படகுகளை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக பெய்ஜிங் தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் 9 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த வியட்னமியப் போர் விமானம் ஒன்று மாயமாய் மறைந்ததைத் தொடர்ந்து அந்த விமானத்தையும் அந்த விமானத்திலிருந்த இரு விமானிகளையும் தேடும் பணியில் வியட்னாமிய கடலோர காவல் படையின் விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தபோது அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. மேட் தீவின் அருகேயுள்ள கடல் பரப்பில் எண்ணெய் திட்டுகள் காணப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக வியட்னாமிய அதிகாரிகள் கூறினர்.
வியட்னாம் விமானத்தை தேடும் பணியில் சீனாவின் படகுகள்
1 mins read

