'சிரியா அதிபருக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கவும்'

'சிரியா அதிபருக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கவும்'

2 mins read
f90ded93-fb51-43f5-8cb7-923beeb11b18
-

வா‌ஷிங்டன்: சிரியாவில் உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் அந்நாட்டு அதிபர் பஷார் அல்=ஆசாத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு வகை செய்யும் ஒரு புரிந்துணர்வு குறிப்பு ஒன்றில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கையெழுத்திட்டதாக வா‌ஷிங்டன் தகவல்கள் கூறின. அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை, சிரியாவில் உள்ள எதிர்க்கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் ஆசாத் பதவியில் நீடிப்பதற்கு உதவி வருவதாகவும் உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஆசாத்தின் அரசாங்கம் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி நடப்பதைத் தடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆசாத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிரியாவில் நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து அமைதி திட்டத்தை வகுத்துள்ளன. ஆனால் அந்த அமைதி உடன்பாட்டின்படி அறிவிக்கப் பட்டுள்ள சண்டை நிறுத்த உடன்பாட்டை சிரியாவில் எதிர்க்கட்சியினரும் அரசாங்கமும் மீறி நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சிரியாவில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமும் எதிர்த்தரப் பினரும் ஒருவரையொருவர் குறை கூறி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுச் சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். அங்கு நடக்கும் சண்டைக்குப் பயந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல் கள் கூறுகின்றன.

சிரியாவில் ஐஎஸ் வசம் உள்ள நகரில் கூட்டணிப் படை நடத்திய விமானத் தாக்குதலில் பல கட்டடங்களிலிருந்து தீப்புகை கிளம்புகின்றது. படம்: ராய்ட்டர்ஸ்