சிங்கப்பூர் - மேடான் இடையே மீண்டும் கருடா விமானச் சேவை

சிங்கப்பூர் - மேடான் இடையே மீண்டும் கருடா விமானச் சேவை

1 mins read

சிங்கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வின் மேடா­னுக்­கும் இடை­யே­யான விமானச் சேவையை 14 ஆண்­டு­களுக்­குப் பிறகு இந்­தோ­னீ­சி­யா­வின் முக்கிய விமான நிறு­வ­ன­மான கருடா மீண்டும் தொடங்க­வுள்­ளது. பொது­மக்­களிடையே அதிக வர­வேற்பு கிடைக்­கா­த­தால் 2002ஆம் ஆண்டில் தொடங்கப்­பட்ட சிங்கப்­பூர் - மேடான் விமானச் சேவை அதற்கு அடுத்த ஆண்­டி­லேயே விலக்­கிக்­கொள்­ளப்­பட்­டது. தினமும் காலை 11.15 மணிக்கு சாங்கி விமான நிலை­யத்­தி­லி­ருந்து கிளம்­பும் விமானம் குவாலனாமு அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு உள்ளூர் நேரப்­படி 11.45 மணிக்­குச் சென்றடை­யும். அங்­கி­ருந்து பிற்­ப­கல் 11.30 மணிக்­குக் கிளம்­பும் விமானம் சிங்கப்­பூர் நேரப்­படி மாலை 4 மணிக்கு வந்து சேரும்.