ஜகார்த்தா: தென் சீனக்கடலில் நட்டுனா தீவுகளுக்கு அப்பால் இந்தோனீசிய தண்ணீரில் சீன மீன்பிடிப் படகையும் அதன் பணிக்குழுவையும் இந்தோனீசியாவின் கடற்படை தடுத்து வைத்திருக்கிறது. மார்ச் மாதம் முதல் நடைபெறும் இத்தகைய மூன்றாவது சம்பவம் இது. சென்ற வெள்ளிக்கிழமை கடற்பயிற்சியின்போது இந்தோனீசியா பகுதியில் இந்த மீன்பிடி படகு தென்பட்டதாக துணை தளபதி ஆரிஃப் பத்ருத்தீன் கூறினார். எச்சரிக்கை துப்பாக்கி சூடுகளுக்குப் பிறகும் மீன்பிடி படகு விலகிச் செல்லாததால் படகைத் தடுத்து நிறுத்துவதற்காக படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படகின் பணிக்குழுவில் ஒரு பெண் இருப்பதாகவும் விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனப் படகைத் தடுத்து வைத்த இந்தோனீசியா
1 mins read

