டொமினிக் குடியரசில் உள்ள கடற்கரை ஒன்றில் கடற்கரைப் பாதுகாவலர்கள் சுறா மீனை கடலுக்குள் இருந்து கரைக்கு இழுத்து வந்து புகைப்படம் எடுத்தபோது அந்தச் சுறா மீன் இறந்து போனது. ஏழு பாதுகாவலர்கள் கடலுக்குள் இருந்த சுறாமீனை கரைக்கு இழுத்துச் சென்றதைக் காட்டும் காணொளி யூடியூபில் சென்ற செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்டது. ஹார்ட் ராக் ஹோட்டல், கெசினோ அமைந்துள்ள புன்டா கானாவுக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கரையில் துடித்த மீனை அவர்கள் கயிற்றில் கட்டியதுடன் அதன் முகத்தை வளையம் ஒன்றுக்குள் நுழைத்து அதன் வாயில் பலகை ஒன்றும் திணித்தனர். பின்னர் அதனருகில் நின்று பாதுகாவலர்கள் புகைப்படம் பிடித்துக்கொண்டனர். அவர்களுடன் சுற்றுப்பயணிகளும் சிறுவர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தச் செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹார்ட் ராக் ஹோட்டல், கெசினோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். படம்: கிரே ஸ்டோக்ஸ்/ஃபேஸ்புக்

