நஜிப்: மகாதீரின் பொய்கள் நிராகரிப்பு

நஜிப்: மகாதீரின் பொய்கள் நிராகரிப்பு

1 mins read
f33fb69b-ac74-444a-93b9-b70aedf2943c
-

பெட்டாலிங் ஜெயா: இடைத்­தேர்­த­லில் தேசிய முன்­ன­ணிக் கட்சி மாபெரும் வெற்றி வாகை சூடி­யி­ருப்­பது டாக்டர் மகாதீர் முக­ம­து தமக்கு எதிராகக் கூறிய பொய்களை மக்கள் நிரா­க­ரித்­தி­ருப்­பதைக் காட்­டு­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக் கூறி­யுள்­ளார். எதிர்க்­கட்­சி­யில் ஏற்­பட்­டுள்ள பிளவும் ஆளுங்கட்­சிக்கு சாத­க­மாக அமையவே, தேசிய முன்னணி வேட்­பா­ளர்­கள் நேற்று முன்­தி­னம் சுங்கை புசார், கோலா கங்­சா­ரில் நடந்த இடைத் தேர்­த­லில் கூடுதல் வாக்குகள் வித்­ தி­யா­சத்­தில் வெற்­றி பெற்றனர்.

மலே­சி­யப் பிர­த­மர் நஜிபின் தலைமைத்­து­வத்­துக்கு எதிர்ப்பு வலுத்­து­வந்த போதிலும் அம்னோ கட்­சியைச் சேர்ந்த வேட்பா­ளர்­கள் வெற்­றி ­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத் ­தக்­கது. 1எம்டிபி விவ­கா­ரத்­தின் தொடர்­பில் பிர­த­மர் நஜிப்பை பதவி வில­கு­மாறு எதிர்க்­கட்­சி­கள் கடந்த ஓராண்டா­கவே வலியுறுத்தி வருகின்றன. முன்பு எதி­ரி­க­ளாக இருந்த அமானா கட்­சி­யி­ன­ருக்கு டாக்டர் மகாதீர் இந்தத் தேர்­த­லில் ஆதரவு தெரி­வித்­த­போ­தும் இவ்விரு தொகு­தி­களி­லும் அமானா கட்சி மூன்றா­மி­டத்தையே பிடித்தது. கோலா கங்­சா­ரில் 6,969 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் சுங்கை புசாரில் 9,191 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் தேசிய முன்­ன­ணிக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

2013ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் கோலா கங்­சா­ரில் 1,082 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் சுங்கை புசாரில் 399 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் தேசிய முன்­ன­ணிக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­ற­னர்.